×

சாக்லேட் அதிகம் சாப்பிடலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

உலகம் முழுவதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்று சாக்லேட்.சாக்லேட், கோகோ என்ற மரத்தில் விளையும் பழத்தின் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில், பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்கள் அதிகம் உள்ளன. சாக்லேட் அதிகம் சாப்பிடலாமா என்றால், சாக்லேட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.

ஏனெனில் டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை மற்ற சாக்லேட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். இது உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். மற்ற சாக்லேட் வகைகளை விட சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம். ஆனால், எவ்வளவுதான் சாக்லேட் ருசிகரமாக இருந்தாலும் ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல இதையும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவுதான் உட்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு ஒருவர் 28 கிராம் அளவுதான் சாக்லெட் உட்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறார்கள். அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

டார்க் சாக்லேட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். இந்த இரண்டு சாக்லேட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சாக்லேட் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்

சாக்லேட் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இதயத்திற்கு வலு சேர்க்கிறது. ரத்தம் உறைவது தவிர்க்கப்படுகிறது. சிறுநீரகக் கற்களுக்கு எதிராக நன்மை விளைவிக்கிறது.

தீமைகள்

அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் தலைவலி வருகிறது. மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அக்கியை ஏற்படுத்தும் கிருமிகளையும் சாக்லேட் உற்பத்தி செய்கிறது. இதனால் நோயில் இருந்து மீண்டவர்கள் டார்க் சாக்லெட்டுகள் உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் அதிகளவில் சாப்பிடும்போது பற்கள் அழுகும் நிலை ஏற்படும். நரம்பு குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனால், சாக்லேட்டை அளவோடு சாப்பிட்டு அதன் பயன்களைப் பெறலாம்.

The post சாக்லேட் அதிகம் சாப்பிடலாமா? appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!